Staff & Students Welfare
Student Societies: தமிழ் இசை வட்டம்
2012/ 2013 கல்வியாண்டு மாணவர்களால் தோற்றம் பெற்றதாகவும் மதபேதமின்றி அனைத்து மாணவர்களும் உறுப்புரிமையை மேற்கொள்ளவும் முடியும். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பொதுவான நிகழ்வுகள், மாணவ அமைப்புகளால் ஏற்பாடு செய்து முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் போது தமிழ் இசை வட்டம் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க ஒத்துழைப்பு வழங்கும்.
தமிழ் இசை வட்டத்தின் நோக்கங்களாவன
மாணவர்கள் மத்தியில் காணப்படும் இசைசார் நலன்களை பேணலும் மேம்படுத்தலும், பல்கலைக்கழகத்திலே சிறந்த இசையார்வளர்களை வெளிக்கொணரல், பல்கலைக்கழகத்திற்கு சிறந்த இசைக்கலைஞ்சர் மற்றும் பாடகர்களை வழங்குதல், சிறந்த பாடகர்களை உருவாக்கும் வகையிலான பயிற்சிகளை வழங்குதல், இசைக்கருவிகளை கையாள்வது தொடர்பான பயிற்சி, இசைக்கருவுகள் குறைபாடு ஏற்படும் போது அதனை மேலிடத்தில் சுட்டிக்காட்டி ஆவணம் செய்தல், பல்கலைக்கழகத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடாத்துதல், தேவையின் நிமித்தம் பல்கலைக்கழக வைபவங்களை இசை நிகழ்ச்சியின் மூலம் அலங்கரித்தல், சமயம் மற்றும் கலாசார இசை நிகழ்ச்சிகளை நடாத்துதல், வில்லுப்பாடல்களை வழங்குதல், பக்கிப்பாடல், நாட்டார் பாடல், மேலைத்தேய பாடல், மெல்லிசைப்பாடல் எனும் பல வண்ணங்களில் இசைப்பாடல்களை வழங்குதல் மற்றும் வைபவங்கள் நாடகங்களின் போதான பின்னணி இசை.